நிகழ்ப்பட கையேடு – தமிழ்

ஷிவான்ஷ் உரம், ஒரு நடவுக் காலத்தில், உயிரற்ற மண்ணிற்கு உயிரூட்டி, உழவர்களின் செலவைக் குறைக்க உதவுகின்றது.

முதற் படி

நாள் 0: மூலப்பொருட்களை நறுக்கவும்

 • உலர் பொருட்கள்: காய்ந்த இலைகள், கோதுமைத் தாள்கள் / அரிசியின் வைக்கோல், காய்ந்த புற்கள்.
 • பசுமையான பொருட்கள்: பசுமையான இலைகள், நீர் வாழ்த் தாவரங்கள், பசுமையான களைச்செடிகள், பச்சைப்புற்கள்.
 • ஈரமான கால்நடைக்கழிவுகள் (சாணம் / புழுக்கைகள்): 2 வாரங்களுட்பட்டது.

இரண்டாம் படி

நாள் 0: முதல் மூன்று அடுக்குகள்

குவியலின் விட்டம்: 4 அடிகள் அல்லது 1.2 மீட்டர்கள்

 • 9 தட்டுகள் (பாண்டு) காய்ந்த பொருட்களும்; 1.5 தட்டுகள் தண்ணீரும்
 • 6 தட்டுகள் பசுமையான பொருட்களும்; 1 தட்டு தண்ணீரும்
 • 3 தட்டுகள் கால்நடைக் கழிவுகளும்; 0.5 தட்டு தண்ணீரும்

மூன்றாம் படி

நாள் 0: அடுக்குகளைத் தொடரவும்

 • இவ்வடுக்குகள் நம் தோள்பட்டை அளவை எட்டும் வரையில் தொடரவும்.
 • இறுதியான மேல் அடுக்காக, மூடி போல 9 தட்டுகள் காய்ந்த பொருட்களையும், 1.5 தட்டுகள் தண்ணீரையும் சேர்க்கவும்.
 • ஒரு பிளாஸ்டிக் தாளைக்கொண்டு குவியலை மூடி வைக்கவும்.

நான்காம் படி

நாள் 4 (4 இரவுகளுக்குப் பிறகு): வெப்ப பரிசோதனை

 • குவியல் சூடாக இருந்தால், அது சரியான அறிகுறி
 • குவியல் மிதமான சூட்டிலோ, குளிர்ச்சியாகவோ இருந்தால், சூட்டை அதிகரிக்க சாணத்தை சேர்க்கவும்

ஐந்தாம் படி

நாள் 4 (4 இரவுகளுக்குப் பிறகு): ஈரப்பத பரிசோதனை

குவியலிலிருந்து சிறிதளவு பொருட்களை கையிலெடுத்து பிழியவும்:

 • 10 – 15 நீர் துளிகள் வெளிவந்தால், அது சரியான அறிகுறி.
 • மிகுந்த ஈர நிலையில் காணப்பட்டால்: பொருட்களை சூரிய வெப்பத்தில் உலர வைக்கவும்.
 • மிகுந்த உலர்வு நிலையில் காணப்பட்டால்: குவியலை திருப்பும் போது, ஒரு தட்டு (பாண்டு) தண்ணீரைத் தெளிக்கவும்.

ஆறாம் படி

நாள் 4 4 இரவுகளுக்குப் பிறகு): குவியலை திருப்பிவிடவும்

 • வெளிப்புறத்தில் உள்ள தோல்போன்ற பகுதியை உரித்தெடுக்கவும்.
 • இந்த உரித்தெடுத்த பொருட்களைக்கொண்டு அருகாமையில் மற்றொரு புதிய குவியலை உருவாக்கவும்.
 • முதற்குவியலின் பொருட்கள் தீரும்வரை, இந்த புதியக் குவியலை தொடரவும்.

ஏழாம் படி

நாள் 6, 8, 10, 12, 14 மற்றும் 16இல் இதயே மீண்டும் மீண்டும் செய்யவும்: குவியலின் வெப்பம் மற்றும் ஈரப்பத பரிசோதனை மற்றும் குவியலைத் திருப்புதல்

 • குவியலின் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை சோதிக்கவும்.
 • இதனை திருப்பி விடவும்.
 • நெகிழித் தாள் கொண்டு மூடி வைக்கவும்.

இந்தக்குவியல் மொத்தம் 7 முறை திருப்பிவிடப்படும்.

எட்டாம் படி

நாள் 18: உபயோகத்திற்கு தயார்

 • குவியலின் உள்ளே உள்ள வெப்பம் தணிய வேண்டும்.
 • குவியல் குளிராவிடில், செய்முறை நிறைவடையவில்லை என்று பொருள்.
  அப்படியானால் திருப்பிவிடுவதைத் தொடரவும்.
 • சேமிப்பு முறை:
  • நெகிழித்தாள் அல்லது வைக்கோல் கொண்டு மூடி வைக்கவும்.
  • 6 மாதங்களுக்குள் உபயோகிக்கவும்.

ஒன்பதாம் படி

பயிர்களை வளர்க்க இந்த உரத்தை உபயோகிக்கவும்

ஷிவான்ஷ் உரத்தை 3 விதங்களில் உபயோகிக்கலாம்:

 • விதைகளை விதைக்கும் பொழுது இடலாம்.
 • முன்னமே விளைந்த செடிகளின் மேல் தூவலாம்.
 • மிகப்பெரிய விளைநிலங்களில் வார்க்கலாம்.

பயன்முடிவுகள்

 • வளமுற்ற மண்.
 • நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்கள்.
 • ஊட்டச்சத்தான உணவு.

பயன்முடிவுகள்

 • வளமுற்ற மண்.
 • நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்கள்.
 • ஊட்டச்சத்தான உணவு.

மேலும் சில நிகழ்ப்படங்கள்

மனோஜ் பார்கவா – “ஷிவான்ஷ் ஃபார்மிங்” அறிமுகம்.
6 நிமிடம் மற்றும் 30 வினாடிகள் கொண்ட: நிகழ்ப்படத்தின் இணையதள இணைப்பு இங்கே

முழுநீள கற்பிக்கும் காணொளி – ஷிவான்ஷ் உரத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும்
1 மணிநேரம்: நிகழ்ப்படத்தின் இணையதள இணைப்பு இங்கே

பயன்முடிவுகள் / செயல்முறை விளக்க காணொளி
1நிமிடம்: நிகழ்ப்படத்தின் இணையதள இணைப்பு இங்கே

கம்பி வலையற்ற உரத் தயாரிப்பு காணொளி குறிப்பேடு?

வளமான, செழிப்பான மண். குறைந்த நீர்ப்பாசன தேவைகள். குறைந்த செலவு. செயற்கை உரமற்ற விவசாயம்.நச்சு தெளிப்பான்கள் தவிர்ப்பு. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்கள். ஊட்டச்சத்தான உணவு. நச்சில்லா தன்மை. அனைத்து விதங்களிலும் பாதுகாப்பானது, இயற்கையானது.

© Copyright 2021 | SHIVANSH FARMING